ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை

அவுஸ்ரேலியக் காவல்துறையினர் , அதிகாரபூர்வமற்ற முறையில் விமானங்களுக்கு ரேடியோ தகவல் தொடர்பு அனுப்பப்பட்டதன் தொடர்பில், விசாரணை நடத்தி வருகின்றனர். Melbourne, Avlon விமான நிலையங்களில் அத்தகைய 15 சம்பவங்கள் பதிவாயின. சென்ற மாதம், விமானப் போக்குவரத்து அதிகாரி என்ற போர்வையில், Virgin Australia நிறுவன விமானத்தின் தகவல் தொடர்பில், ஒருவர் குளறுபடி செய்தார். விமானம் தரையிறங்குவதற்குச் சற்று நேரத்திற்கு முன்னால், அவர் கொடுத்த தகவல் காரணமாக, விமானத்தை மீண்டும் மேலேற்றும்படி ஆயிற்று. அதே நாளில் விமானப் போக்குவரவுக் … Continue reading ரேடியோ தகவல் தொடர்பில் அவுஸ்ரேலியா விசாரணை